Ticker

6/recent/ticker-posts

HRA Calculation

        

        வாடகை வீட்டில் குடியிருப்போர் தாங்கள் செலுத்தும் வீட்டு வாடகையை வரி விலக்காக கோரலாம். எந்தவொரு பணியாளரும் இந்த வரி விலக்கு சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விலக்கானது இந்திய வருமான வரிச் சட்டம் -1961, பிரிவு 10(13A) இன் படி கிடைக்கும். இந்த விலக்கைப் பயன்படுத்துவடன் மூலம் உங்கள் மொத்த ஊதியம் குறைகிறது. ஆகையால் மொத்த வரியும் குறைகிறது. ஒருவேளை சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த விலக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். HRA விலக்கு கோரும் போது சில நேரங்களில் வருமான வரித் துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரலாம்.


HRA விலக்கு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக கோருதல், விலக்கு கோருவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாதிருப்பது, வாடகை வீட்டில் வசிக்காவிட்டாலும் HRA விலக்கு கோருதல், போலி ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை நடக்கின்றன. இது போன்ற சூழ்நிலையில் வருமான வரித்துறை வரிசெலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பலாம். HRA வரி விலக்கு கோரிக்கைகளை விசாரிக்கலாம். இந்த விலக்கு பெறுவதற்கு போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்தால், அபராதமும் விதிக்கலாம்.

HRA விலக்கு என்பது நிபந்தைகள் பேரில் வழங்கப்படும் ஒரு வரிவிலக்கு ஆகும். நிபந்தனைகள் பற்றிய ஒரு கணக்கீடு.

A - ஒரு நிதியாண்டில் பெறப்பட்ட மொத்த HRA தொகை (Arrear HRA is not included)


B - i)  மொத்த வருமானத்தில் 50% + DA 

           (சென்னை, மும்பை, டெல்லி, கொல்கொத்தா நகரங்களுக்கு மட்டும்)

                            (அல்லது)

       ii) மொத்த வருமானத்தில் 40% + DA 

            (பிற அனத்து நகரங்களுக்கும்)


C - ஒரு ஆண்டில் செலுத்தப்பட்ட மொத்த வாடகை (-) மொத்த ஊதியத்தின் 10% (Rent paid (minus) 10% of Gross salary)

* Case Name : Ravindra R.V. Vs DCIT (ITAT Bangalore) Appeal Number : ITA No. 393/Bang/2023


A, B, C இந்த மூன்றில் எது குறைவோ அந்தத் தொகையையே வருமானவரி விலக்காக கோர முடியும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று 0 (Zero) அல்லது அதற்கும் கீழே இருந்தால் இந்த விலக்கு கோர முடியாது.

ஒரு நிதியாண்டில் பெறப்பட்ட மொத்த வீட்டு வாடகைப்படியில் வருமானத்தில் சேர்க்க வேண்டிய தொகை எவ்வளவு, வரிவிலக்கு பெற வேண்டிய தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Basic Salary

:

Pay and Grade Pay only (12 months only)

DA forming part of salary

:

DA (12 months DA including DA Arrear)

Commission

:

Leave it Blank

HRA Received

:

12 month HRA (Previous Year not include) 

Rent Paid

:

Only 12 month rent (Lease not allowed)* 

Tick if residing in Metro city

:

Only Chennai corporation eligible

Exempted HRA

:

Eligible for HRA deduction

Taxable HRA

:

Add this amount to tax calculation



* - நிபந்தணைகள
        1.  வருட வாடகை ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் செல்லும் போது வீட்டு உரிமையாளர் பான் எண் இணைக்கப்படவேண்டும்.
        2.  மாத வாடகை இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் எனில் ரொக்கமாக செலுத்தியிருக்கக் கூடாது.
        3.  வீட்டு உரிமையாளர் வருமானவரி தாக்கல் செய்திருக்க வேண்டும் (புதிய DTC-யில் எதிர்பார்க்கப்படுகிறது)
        4.  அனைத்து ரசீதுகளையும் குறைந்தது 4 ஆண்டுகள் பத்திரமாக வைத்திருக்கவும்.


Post a Comment

0 Comments

Recent, Random or Label

WhatsApp Chat