Ticker

6/recent/ticker-posts

TDS Returns - Correction Statement


        வருமான வரிச் சட்டம் 2025, பிரிவு 536 -யின் படி, வருமான வரிச் சட்டம் 1961, 01.04.2026 முதல் ரத்து செய்யப்படுகிறது. 

        மேலும், வருமான வரிச் சட்டம் 2025, பிரிவு 397(3)(f) -யின் படி, Tax Deductor/Tax Collector தங்களால் தாக்கல் செய்யப்பட்ட டிடிஎஸ் ரிட்டர்ன்ஸ்-ல் ஏதேனும் திருத்தம் இருப்பின் அதனை அந்த நிதியாண்டு முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கொள்ள வேண்டும். 

    மேற்கூறியவற்றின் விளைவாக, 
  • 2018-19   நிதியாண்டு (காலாண்டு 4), 
  • 2019-20   நிதியாண்டு (காலாண்டு 1 முதல் காலாண்டு 4) 
  • 2020-21   நிதியாண்டு (காலாண்டு 1 முதல் காலாண்டு 4) 
  • 2021-22   நிதியாண்டு (காலாண்டு 1 முதல் காலாண்டு 4) 
  • 2022-23   நிதியாண்டு (காலாண்டு 1 முதல் காலாண்டு 4) மற்றும் 
  • 2023-24  நிதியாண்டு (காலாண்டு 1 முதல் காலாண்டு 3) 
   ஆகியவற்றுக்கான திருத்த அறிக்கைகள் 31.03.2026 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் 01.04.2026 முதல் ஏற்றுக்கொள்ளப்படாது. 

    Tax Deductor/Tax Collector மற்றும் பிற பங்குதாரர்கள் இதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும், மேலும் மேற்கண்ட காலத்திற்கான அனைத்து திருத்தங்களும், ஏதேனும் இருந்தால், அவை சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments

Recent, Random or Label

WhatsApp Chat