Ticker

6/recent/ticker-posts

EL Surrender



நண்பர்களே வணக்கம் 🙏

EL surrender/ ஒப்புவிப்பு

 ( ஒப்படைப்பு அல்ல) 

அறிவிப்பு மகிழ்ச்சி 👍


.1/10/25 முதல்...

ஆண்டிற்கு 15 நாட்கள் ...

ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரே நாளில் *1/10/25* எனில்...

அரசுக்கு பெரிய அளவில் நிதி தேவைகள் ஏற்படும்...


இனிவரும் ஓவ்வொரு ஆண்டும் (1/10 )இதே நாளில்... *நிதி மேலாண்மை* செய்வதில் சிரமம் இருக்கும்...


எனவே ஒப்புவிப்பு சார்ந்த சில *வழிமுறைகள்* ...


1) புதிதாக பணியில் (27/4/20 க்கு பிறகு) சேர்ந்தவர்களுக்கு (சுருக்கமாக) அவர்களின் *வழக்கமான* *ஆண்டு* ஊதிய உயர்வு *தேதியில்* ஒப்புவிப்பு ...


2) ஏற்கனவே பணியில் உள்ளவர்கள்/ ஒப்புவிப்பு செய்தவர்கள்

 *கடைசியாக* எந்த *தேதி/மாதம்* ஒப்புவிப்பு செய்தார்களோ அதே தேதி/மாதம்...

1/10/25 முதல்... ஒப்புவிப்பு 


இந்த *இரண்டே* இரண்டு விதிமுறைகள் தான்...🙏


 *சந்தேகங்கள் எழுவது* 


1) கடந்த முறை 4/9/2019 எனில்?

இந்த முறை 4/9/2026 ( 2025 இல் இயலாது)


2) கடந்த முறை 3/10/2019  எனில் தற்போது 3/10/2025.


3) கடந்த முறை 31/3/2020 எனில் இந்த முறை இந்த முறை 31/3/2026...


 *இவ்வளவு தான்* 

மற்ற படி இதில் *பெரிய குழப்பம் எதுவும் இல்லை* ..


எ.கா உடன் தெளிவாக *அரசாணை 35  நாள் 30/6/25* உள்ளது 🙏


சிலரின் கூடுதல் சந்தேகங்கள் 🤣


1) நான் 2020 க்கு முன் 2/3 ஆண்டுகளாக சரண் செய்ய வில்லை..

அதனால் 1/10/25 இல் செய்யலாமா?

இயலாது நீங்க *கடைசியாக* எப்போது சரண் செய்தீர்களோ. (அது 2015 ஆக இருந்தாலும் சரி 2010 ஆக இருந்தாலும் சரி 🤣)

அதே *தேதியில்* தான் தற்போது சரண் செய்ய இயலும் ...


2) நான் 2020 க்கு முன் பணி ஏற்பு

ஆனால் *இதுவரை ஒரு முறை* கூட சரண் செய்ய வில்லை..

இது தான் தங்களுக்கு *முதல் முறையாக* சரண் எனில்...

நீங்களும் உங்கள் *வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு தேதியில்* தான் சரண் செய்ய முடியும் 🙏...

(1&2 புரிந்து கொள்ளப்படுகிறது.. கூடுதல் விளக்கங்கள் வரலாம்) 


3) நான் ஆசிரியர்..

எனது முந்தைய சரண் 5/12/2019

தற்போது நான் 31/10/25... இல் பணி ஓய்வு

(மறு நியமனத்தில் 1/11/25 முதல் இருப்பேன்)?


மறு நியமனத்தில் இருந்தாலும்..

 *பணி ஓய்வு பிறகு சரண்* செய்ய *இயலாது* .

உங்களுக்கு 31/10/25 படி இருப்பில் உள்ள மொத்த நாட்கள் ( max 240) EL encashment செய்யலாம்....


4) அதேபோல் 31/7/25 பணி ஓய்வு.

அவர்கள் 31/7/25 ஓய்வு நாளில் இருப்பில் உள்ள மொத்த நாட்கள் ( max 240) EL encashment செய்யலாம்...🙏

( *EL surrender at retirement* பழைய முறையில் தான் அது *வழக்கமான ஒன்று* அதற்கு *தடை* எதுவும் *இல்லை* ) 


5) எனது முந்தைய சரண் 24/11/2018...

பணி ஓய்வு 31/12/25

... 24/11/2025 சரண் செய்யலாமா?

ஆம் 24/11/25 இல் 15 நாட்கள் சரண் செய்ய முடியும்..

( எனது தனிப்பட்ட கருத்து...

24/11/25 இல் 15 நாட்களுக்கு பதிலாக

பணி ஓய்வு நாள் 31/12/25 மொத்தமாக EL encashment செய்யுங்கள்...

ஏனெனில்..

பணியில் இருக்கும் போது EL surrender amount " *taxable* ". *வருமான வரி* உண்டு 

பணி *ஓய்வு EL encashment* (max 240) எனில் " *non taxable* ". 🙏


6) ( ஓய்வுக்கால பலன்களில் *UEL on PA* ( *max 90* ) மட்டும் தான் *taxable* 

மற்றபடி SPF/ GPF/DCRG/ commutation/ CPS/ *EL* (max240days) எல்லாவற்றுக்கும் வருமான வரி விலக்கு உண்டு) ...


7) இதற்கு முன் ஒப்புவிப்பு செய்த தேதி தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்... 

( ஒப்புவிப்பு செயல்முறைகளின் தேதி

அல்லது (D.O.E ) ஒப்புவிப்பு காசாக்கப்பட்ட தேதியை கருத்தில் எடுத்துக் கொள்ள கூடாது) 



தகவலுக்காக.

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

4/7/25

Post a Comment

1 Comments

  1. Sir, ஏற்கனவே முப்பது நாள் சரண் செய்தவர்கள் 30 நாள் சரண் செய்யலாமா, புதிதாக சரண் செய்பவர்கள் இந்த வருடம் விடுத்து அடுத்த வருடம் 30 நாட்கள் சரண் செய்ய முடியுமா தகுந்த தெளிவுரை வழங்கவும்..

    ReplyDelete

Recent, Random or Label

WhatsApp Chat