வரி ஏய்ப்பைத் தடுக்கவும் போலியான பான் எண்களைக் கண்டறியவும் வருமானவரி துறை பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக ஆதார் என்ணுடன் இணைக்கப்படாத பான் எண் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ₹10,000/- (ரூபாய் பத்தாயிரம்) வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. எனவே இதுவரை ஆதார்-பான் இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்கவும். ஆதார்-பான் இணைப்பதற்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். ஆதார்-பான் இணைப்பின் நிலை பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
என்னென்ன பரிவர்த்தனைகள்:
- புதிய வங்கிக் கணக்கு தொடங்குதல்
- வங்கி கணக்கு வைத்திருத்தல்
- அசையும்/அசையா சொத்துக்கள் வாங்குதல்
- பங்குச்சந்தை/பரஸ்பர நிதி - முதலீடு செய்தல்
- வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்தல்
- வருமானவரி தாக்கல் செய்தல்
தொடர்ந்து இணைக்காமல் இருந்தால்
- பான் எண் முடக்கப்படும்
- வங்கிக்கணக்கு முடக்கப்படும்
- வருமானவரி தாக்கல் செய்ய முடியாது

0 Comments